பதிவு செய்த நாள்
14
ஜன
2015
10:01
பழநி: பழநி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. பதிமூன்றே நாட்களில் தங்கம் 330 கிராம், வெள்ளி 19 ஆயிரத்து 710 கிராம், வெளிநாட்டு கரன்சி 311, ரொக்கமாக ஒருகோடியே 53 லட்சத்து 31 ஆயிரத்து 630 ரூபாய் வசூலாகியுள்ளது.
இது 13 நாட்களில் கிடைத்துள்ளது. தங்கம், வெள்ளியில் ஆன, தாலி,மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ் பங்கேற்றனர்.