பதிவு செய்த நாள்
14
ஜன
2015
11:01
பெங்களூரு: விவேக் நகர், குழந்தை இயேசு ஆலயம், திருத்தல, 44ம் ஆண்டு பெருவிழாவில், இன்று தேர்பவனி நடக்கிறது. குழந்தை இயேசு ஆலயம், திருத்தல, 44ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, மும்பை ஆஸ்வால்ட் கர்தினால் கிரேசியஸ், பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் ஆகியோர் இணைந்து கொடியேற்றினர். பெங்களூரு உயர்மறை மாவட்டத்தின் பங்கு தந்தைகள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர். கடந்த, ஜன., 5ம் தேதி முதல், 13ம் தேதி வரை, நவநாள் பூஜை நடந்தது. இன்று, குழந்தை இயேசு பெருவிழா நடக்கிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, தன்னார்வ தொண்டர்களுக்காகவும், காலை 5:45, 8:30, 11:30 மற்றும் மாலை, 5:00 மணிக்கு தமிழிலும்; காலை, 7:00 மணி, மாலை, 4:00 மணிக்கு, ஆங்கிலத்திலும்; காலை, 10:00 மணி மற்றும் மதியம், 1:00 மணிக்கு, கன்னடத்திலும்; மதியம், 2:00 மணிக்கு, மலையாளத்திலும்; மாலை, 3:00 மணிக்கு, கொங்கனியிலும் திருப்பலி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, குழந்தை இயேசுவின் தேர்பவனி ஆரம்பமாகிறது. தேர்பவனியை, பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் துவக்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் ஜார்ஜ் உட்பட, பலர் பங்கேற்கின்றனர். தேர் பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும். நிறைவில், திவ்ய நற்கருணை ஆசிர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, நிர்வாகி ஆரோக்கியதாஸ், ரெக்டரும், ஆலய பங்கு தந்தையுமான மைக்கேல் அந்தோணி தலைமையில் பங்கு மக்கள், பங்கு பேரவை உறுப்பினர்களும் செய்துள்ளனர்.