பதிவு செய்த நாள்
14
ஜன
2015
11:01
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு சொந்தமான, திரிநேத்ரா விருந்தினர் அறையின், மேலாளராக பணிபுரிபவர் கணபதிராஜு. இவர், நேற்று, பணியில் இருந்த போது, மது அருந்தி விட்டு, பக்தர்களை, தகாத வார்த்தைகளால், அவமரியாதை செய்துள்ளார். இதனால், கோபம் அடைந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, கணபதிராஜு, நேற்று, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.