பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
திருப்பதி: திருமலையில், ஸ்பெசிபைட் அத்தாரிட்டி குழுவின் புதிய தலைவராக, ஜே.எஸ்.வி. பிரசாத் நேற்று பதவி ஏற்றார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், ஸ்பெசிபைட் அத்தாரிட்டி யின் நிலைக்குழுவின் குழுவின் புதிய தலைவராக, ஆந்திர மாநில அறநிலைய துறையின் முதன்மை செயலராக பணியாற்றும், ஜே.எஸ்.வி. பிரசாத், நேற்று, காலை பதவியேற்றார். அவருக்கு, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவ், ஏழுமலையான் சன்னதி எதிரில் உள்ள, கருடாழ்வார் சன்னதி அருகில், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பதவி ஏற்பிற்கு பின், பிரசாத், தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு, ரங்கநாயகர் மண்படத்தில், சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.