ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் சூரியனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2015 11:01
ஈரோடு: தை பொங்கலை முன்னிட்டு, ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் சாயா தேவி, உஷாதேவி சமேத சூரியனுக்கு தனியாக சன்னதி உள்ளது. தை பொங்கல் தினமான நேற்று அதிகாலை, சூரியனுக்கு எட்டு வகை வாசனை திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து அலங்கார பூஜைகளும் நடந்தது. பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். தை பொங்கலை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதே போல் முருகன் கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம், நேற்று காலை கணிசமான அளவு காணப்பட்டது.