பதிவு செய்த நாள்
17
ஜன
2015
01:01
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாட்டுப் பொங்கலையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று காலை 9:15 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உட்பட 12 பொருட்களால் சிறப்பு அபிஷேகம், கரும்பு, வாழை, எலுமிச்சை, மலர் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் முருகன் சுவாமி மாடு விரட்டும் வேடுபறி உற்சவம் நடந்தது. அலங்கரித்த பல்லக்கில் முருகன் சுவாமி வீதியுலா சென்று, காந்தி நகர் நர்த்தன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன், மாடு விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.