உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 01:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவி லில் ராபத்து உற்சவத்தை தொடர்ந்து ஆண்டாள் வைபவம் நடந்தது. கடந்த 14ம் தேதி காலை 4:30 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு நித்யபூஜை, 7:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை நடந்தது. பகல் 11:00 மணிக்கு ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் பக்தகோலாகலனின் உபன்யாச பூர்த்தி, 12:00 மணிக்கு தேகளீச பெருமாள் சமேத ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சுவாமிக்கு மகா தீபாராதனை, ஆஸ்தானம் எழுந்தருளல் நடந்தது.