செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் குளக்கரையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை மகரஜோதி வழிபாடு நடந்தது. இதில் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் செய்தனர். 6.40 மணிக்கு ஜோதி தரிசனம், சிறப்பு வழிபாடு நடந்தது. அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கினர்.அறங்காவலர் செஞ்சி பாபு, தலைவர் சங்கர், செயலாளர் அனுக்குமார், செந்தில்குமார், கவுன்சிலர் பத்மநாபன், குருசாமி சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜா அர்ச்சகர் பூஜைகளை செய்தார்.