கடலூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரவுபதி அம்மனுக்கு சொர்ணாபிஷேகம் நடந்தது. கடலூர், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொர்ணாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு கோவில் வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் கோவில் உலா வந்தது. பின்னர் அம்மனுக்கு சொர்ணாபிஷேகம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.