அவலூர்பேட்டை: நொச்சலூர் திரிபுர சுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்தி விழா நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம் நொச்சலூர் கிராமத்தில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு 15 ம்தேதி இரவு சந்திர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான், திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டீகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. பஞ்சமூர்த்தி சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தின் வீதியுலா நடந்தது.