பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும், 10 நாள் தை பிரம்மோற்சவம், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, த்வஜாரோஹணத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, தங்க சப்பரம் நிகழ்ச்சி நடந்தது. இதில், வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, சிம்ம வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டாவது நாளான, இன்று காலை, 7:30 மணிக்கு, ஹம்ச வாகனமும், இரவு, 7:00 மணிக்கு, சூரிய பிரபை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை, நாளை காலை, 5:00 மணிக்கு நடக்கிறது.