திருவெண்ணெய்நல்லூர்: பரிக்கல் லட்சுமி நரசிம்மருக்கு வரும் 19ம் தேதி பேரங்கியூர் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் பெண்ணையாற்றில் வரும் 19ம் தேதி பரிக்கல் லட்சுமிநரசிம்மர், ஆலங்குப்பம் பாண்டுரங்கன், அங்காளம்மன், பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி, தடுத்தாட்கொண்டூர் இளங்சோலைமாரியம்மன், கீரிமேடு மாரியம்மன் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது.ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் மக்களின் நலன்கருதி குடிதண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும்.லட்சுமிநரசிம்மர், பெண்ணையாற்றில் தீர்த்தவாரிக்கு செல்வதால் 19ம் தேதி முழுவதும் பரிக்கல் கோவிலில் நடை மூடப்பட்டு, மறுநாள் (20ம் தேதி) திறக்கப்படும் என கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி தெரிவித்தார்.