மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாணாதிராஜபுரம் கிராமத்ததில் ஸ்ரீ ஜெயம் கோசாலை உள்ளது.பசுவதையை தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கோசாலையில் அடிமாட்டுகளாக விற்க ப்படும் மாடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இக்கோசாலையில் 750 பசுக்கள் வளர்க்கப்படுகின் றன.பசுவுக்கு கோபூஜை செய்வதால் தேவர்கள் அனைவரும் இங்கு வந்து ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். கோபூஜை செய்தால் சகலஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மாட்டுபொங்கல்,தை வெள்ளி, ஏகா தசி திதி, அனுஷ நட்சத்திரம் கூடிய நேற்று இந்த கோசாலையில் உலக நண்மை,மழை பொழிவு மற்று ம் விவசாயம் செழிக்கவேண்டி கோபூஜை நடத்தப்பட்டது. பூஜைகளை கிரி குருக்கள் நடத்தி வைத்தா ர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பசுக்களுக்கு மாலை அணிவித்து கோபூஜை செய்து உண வுகளை வழங்கி வழிபட்டனர்.