பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த, சீராப்பள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், வீர குமார்களின் கத்திபோடும் திருவிழா, நாளை (18ம் தேதி) நடக்கிறது. கடந்த, 12ம் தேதி காலை சாமுண்டி, 12 மகாஜோதி உள்ளிட்ட முப்பெரும் சக்தி அழைத்தல், பண்டாரம் கட்டுதல், அம்மன் அச்சு வெல்லம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஜன.,17) மாலை, 6 மணிக்கு, வாஸ்து சாந்தி பூஜையும், இரவு, 11 மணிக்கு, அம்மன் பயணம் செல்லுதலும் நடக்கிறது. நாளை (ஜன., 18) காலை, 4.30 மணிக்கு, விக்னேஸ்வர, கோ, அஸ்வ மற்றும் கஜ பூஜை, மாலை, 6 மணிக்கு, மஹா கணபதி மற்றும் நவக்கிரஹ ஹோமம், லட்சுமி குபேர பூஜையும் நடக்கிறது. காலை, 8 மணிக்கு, வீர குமாரர்கள் வீரமுஷ்டி அலகு சேவை செய்தல் (கத்தி போடும் நிகழ்ச்சி) அம்மன் சக்தி அழைத்தல், காலை, 11 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம், 3 மணிக்கு, திருவிளக்கு பூஜையும், இரவு, 9 மணிக்கு, கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.ஜனவரி, 19ம் தேதி, காலை, 9 மணிக்கு, அம்மன் சாமுண்டி அழைத்தல், மதியம், 2 மணிக்கு திருமஞ்சனம், அம்மன் திருவீதி உலா, மாலை, 6 மணிக்கு, வீர குமாரர்களின் வீரமுஷ்டி அலகு சேவையும், மஹாஜோதி புறப்பாடும், இரவு, 9 மணிக்கு, மஹாதளிகை பூஜையும், பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. ஜனவரி, 20ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.