நிறைய பாவம் பண்ணிட்டேன்! கடவுள் தண்டிச்சிருவாருன்னு பயமா இருக்கு! இனி தப்பே பண்ணமாட்டேன். செஞ்ச பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம்! என மனம் திருந்தியவர்கள் கோயில் கோயிலாக அலைய வேண்டிய அவசியமே இல்லை. இதோ! இந்தத் தேவாரப் பாட்டைப் பாடினால் பாவம் விலகும் என்கிறார் சுந்தரர். படியுங்களேன்! பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைபோகமும் திருவும் புணர்ப்பானைபின்னை என் பிழையைப் பொறுப்பானை பிழையெலாம் தவிரப் பணிப்பானை இன்ன தன்மையன் என்று அறியவொண்ணா எம்மானை எளி வந்த பிரானைஅன்னம் வைகும் வயல் பழனத்து அணிஆரூரானை மறக்கலும் ஆமே இந்த பாடலை திருவாரூர் சிவன் பற்றியது. இது ஒரு பாவமன்னிப்பு பாட்டுமல்ல! இதைப் பாடுவோர்க்கு பொன்னும், பொருளும் அள்ளித் தருவார் திருவாரூர் தியாகராஜப் பெருமான். அது மட்டுமல்ல! பாவம் செய்யாத அளவுக்கு நல்லறிவையும் தருவார்.