திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாக இரவு 9.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று இரவு எட்டு மணிக்கு நடை சாத்தப்படும் என கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன் தெரிவித்தார். கிரிவலம்: கோயில் சார்பில் பவுர்ணமி கிரிவலம் வழக்கமாக, சஷ்டி மண்டபத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு துவங்கும். கிரகணத்தை முன்னிட்டு, இன்று மாலை 5.30 மணிக்கு கிரிவலம் புறப்படும்.