பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
11:06
திருநெல்வேலி : மேலக்கல்லூர் மகாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா பூஜைகள் இன்று (16ம் தேதி) துவங்குகிறது. சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. மகா கணபதியை குல தெய்வமாக அதே ஊரைச் சேர்ந்த பலரும் வழிபட்டு வருகின்றனர். வெளியூர்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் கடந்த 6 மாதமாக நடந்துவந்தது. கோயிலில் சந்தான கோபாலகிருஷ்ணன் பிரதிஷ்டையும் நடைபெறவுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று (16ம் தேதி) மாலை கணபதி பூஜையுடன் துவங்குகிறது. நாளை (17ம் தேதி) காலை 7.30 மணிக்கு சுவாமி அனுக்கை, பிராம்ண அனுக்கை, கணபதி பூஜை, புண்யாகவாசனம், சங்கல்பம், பூர்வாங்கம், கணபதிஹோமம், நவக்கிரஹ சாந்திஹோமம், மாதுரு யோகினி பூஜைகள், ஆச்சார்ய ரிக்விக் வர்ணம், யாகசாலை நிர்மாணம் நடக்கிறது. மாலையில் மிருத்ஸங்கிரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடக்கிறது. 18ம் தேதி காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஜெபம், ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, விக்ரகம் ரத்ன நிவாஸம், மூர்த்தி மருந்து சாத்துதல், பிம்பம் சுத்தி, கர்ப்பக்கிரஹ சுத்தி, நேத்ரோன்மீலனம், சயனாதிவாஸம் பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவான 19ம் தேதி காலை 6.30 மணிக்கு நான்காம் கால பூஜை, ஸ்பர்ஸாஹூதி, கலச யாத்ரா நடக்கிறது. காலை 11.15 மணிக்கு வேதமந்திரங்கள், பஞ்சவாத்யம் முழங்க கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விநாயகருக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் மகாபிஷேகம் நடக்கிறது. ராதாகிருஷ்ணன் பஜனை மண்டலியின் பஜனையும், இரவு அர்ச்சனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் கே.வி.சங்கரன், பொருளாளர் ராமச்சந்திரன், தணிக்கையாளர் ராமசுப்பிரமணியன், செயலாளர் ராமசுப்பிரமணியன், துணைத்தலைவர் ராமசுப்பிரமணியன், பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.