பதிவு செய்த நாள்
19
ஜன
2015
01:01
வேலூர்: வாலாஜா பேட்டையில், 24 மணி நேரத்தில், 27 நட்சத்திர ஹோமம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நன்மைக்காக, 24 மணி நேரத்தில், 27 நட்சத்திர ஹோமம் நேற்று நடந்தது. முரளிதர ஸ்வாமிகள் ஹோமம் நடத்தினார். காரிய சித்தி ஹோமம், வாஸ்து, சந்தான பரமேஸ்வரி, சுயம் வர கலா பார்வதி, சரப துர்கா, அஷ்ட பைரவர், நீலா சரஸ்வதி, தன்வந்திரி ஹோமம் என, 27 நட்சத்திர ஹோமங்கள் நடந்தது. சிறப்பு ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.