பதிவு செய்த நாள்
19
ஜன
2015
01:01
நகரி: பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலைக்கு, நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது.
நகரி அடுத்த, புதுப்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைமகள் அரங்கம் உள்ளது. இங்கு, புதியதாக தாமரையில் அமர்ந்தவாறு சரஸ்வதி அம்மன் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலைக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழாவை ஒட்டி, நேற்று முன்தினம், மூன்று யாகசாலைகள், 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், தொடர்ந்து, கலச
ஊர்வலமும் நடந்தது. காலை, 8:00 மணிக்கு சரஸ்வதி அம்மன் சிலை மீது கலசநீர் ஊற்றி சரணாநந்தா சுவாமிகள் கும்பாபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.