பதிவு செய்த நாள்
19
ஜன
2015
01:01
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே, கோம்புபாளையத்தில் உள்ள பூமி தேவி, நீலாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களில், கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 17ம் தேதி கோம்புபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து, தாரை தப்பட்டைகள் முழங்க, தீர்த்தம் எடுத்து வந்தனர். அனுக்ஞை, ஆச்சார்யவர்ணம், விஷ்வக்சேனா ஆராதனம், புண்யாகம், வாஸ்து பூஜை, மிருத்சங்கிரணம், யாகசாலா பிரவேசம், நான்மறைகளும் அருளிச்செயல்களும் சேவை தொடக்கம், த்வாரகும்ப,சோம கும்ப ஸ்தானம், பீஜாவாபம், அங்குரஹோமம், கலாகர்ணம், கும்பமண்டல ராதாணங்கள், யாகரம்பம், பூராணகுதி நிவேதனம், தீபாராதனை, சாற்றுமறைகள், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு மேல், பூமாதேவி நீலாதேவி ஸ்ரீனிவாசபெருமாள், துவாரபாலகர், கிருஷ்ணர், நாகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள், யாகத்திற்கு தேவையான மங்கள திரவியங்களான பால், தயிர், இளநீர், பட்டு வஸ்திரம், நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான ஹோமப்பொருட்களை வழங்கினர். கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர்.