பதிவு செய்த நாள்
20
ஜன
2015
11:01
குறிச்சி: கோவை, வெள்ளலூர் அருகே, கோவிலில் சிலைகளை உடைத்ததாக, வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். வெள்ளலூர் அருகே, அற நிலையத் துறை கட்டுப்பாட்டில், 100 ஆண்டுக்கு முந்தைய பேச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று சுவாமி சிலைகள் உடைத்து வீசப்படித ருந்தன. உள்பிரகாரத்திலிருந்த வேல், குபேரலிங்கேஸ்வரர் சன்னதியிலிருந்த சிவலிங்கம், நந்தி, வேல், ஆலமரம் அடியிலிருந்த நாகலிங்க சிலைகள் பெயர்க்கப்பட்டு, வளாகத்தில் வீசப்பட்டிருந்தன; நாகலிங்க சிலை உடைக்கப்பட்டிருந்தது. கோவிலில் துப்புரவு பணி செய்ய, நேற்று காலை வந்த பணியாளர் குழந்தைவேலு இதை கண்டார். அப்போது, கோவிலுக்குள் இருந்து, ஒரு வாலிபர் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார். அவரை மடக்கிய குழந்தைவேலு, கோவில் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். போத்தனு?ர் போலீசில், வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் உயரதிகாரிகள், பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் பெயர் இம்தாஜுர் ரஹ்மான், மேற்குவங்க மாநிலம், மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. கடந்த வாரம் கோவை வந்ததாகவும், உடன் வந்த இருவர் கூறியதால் தான், சிலையை சேதப்படுத்தியதாகவும், அவர் போ லீசாரிடம் தெரிவித்து உள்ளார். கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.