பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
11:06
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், வைகாசி விசாக தேரோட்ட திருவிழாவின் முதல்நாள் தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ள இடத்தில், 24 மணி நேரம் நறுமண புகை தரும் ஊதுபத்தி பொறுத்தப்பட்டது.திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவீதி உலா நேற்று துவங்கியது. அர்த்தநாரீஸ்வர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தேர் முதல் நிலையான பூக்கடை கார்னரில் நிறுத்தப்பட்டுள்ளது.அங்கு, 6 அடி உயரம், 20 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட ஊதுபத்தி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஊதுபத்தி ஜஷாங்கீர், ரோஸ், செரீன், ஜாஸ்மின் என நான்கு வகையான நறுமணத்தை தொடர்ந்து, 24 மணிநேரம் தரும் என வாஞ்சிநாத குருக்கள் தெரிவித்தார். வைகாசி விசாக தேரோட்டததை முன்னிட்டு, முதல் முறையாக நறுமண உதுபத்தி பொருத்தப்பட்டுள்ளது.