பதிவு செய்த நாள்
27
ஜன
2015
12:01
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த க.தொழூர் செல்லியம்மன், திரவுபதியம்மன் கோவில்களில் வரும் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. க.தொழூர் செல்லியம்மன், திரவுபதியம்மன், மாரியம்மன், விநாயகர், முருகன், ஐயப்பன், வீரன் கோவில்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 30ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், மாலை 6:30 மணிக்கு முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன பூஜை, திரவிய ஹோமம், தீபாராதனை நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், தீபாராதனை, மாலை 6:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், நாடிசந்தானம், காலை 7:45 மணிக்கு கோ பூஜை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:30 மணிக்கு செல்லிய ம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம், காலை 9:15 மணிக்கு திரவுபதியம்மன் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.