பதிவு செய்த நாள்
28
ஜன
2015
11:01
சேலம் : சேலம், தாதகாப்பட்டி டோல்கேட், சக்தி காளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று நூற்றுக் கணக்கான பெண்கள் பால் குடம் எடுத்து வந்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். சேலம், தாதகாப்பட்டி டோல்கேட், சக்தி காளியம்மன் கோவில் தைத் திருவிழா, ஜன.,20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், நேற்று காலை, நூற்றுக் கணக்கான பெண்கள் பால் குடம் எடுத்து வந்து, அம்மானுக்கு பால் அபிஷேகம் செய்து, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்இன்று இரவு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஃபிப்.,4ல் சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், தொட்டில் கரும்பு, ஆண்கள் அலகு குத்துதல், அக்னிகரகம், பூங்கரகம், மாவிளக்கு, பெண்கள் நாக்கு அழகு குத்துதல் ஆகியன நடக்கிறது. ஃபிப்.,5ல் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா, வாண வேடிக்கை நடக்கிறது. ஃபிப்.,6ம் தேதி காலையில் மஞ்சள் நீராட்டமும், ஃபிப்.,7 மதியம் அன்னதானமும் நடக்கிறது.