வால்பாறை : நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்கு பிரிவு துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலின் 132ம் ஆண்டு திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில், கடந்த 25ம் தேதி இரவு நடுமலை தெற்கு பிரட்டிலிருந்து துண்டுக்கருப்பராயர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, இரவு 1.00 மணிக்கு கோவிலை சென்றடைந்தார்.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.