வால்பாறை : உருளிக்கல் மாரியம்மன் கோவில் மகாகும்பாபிேஷக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ள, உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவு மகாசக்திமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிேஷகவிழா நேற்றுமுன்தினம் நடந்தது.விழாவில் காலை 10.00 மணிக்கு, பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை எடுத்து, கோவிலை வலம் வந்த பின் காலை 10.10 மணிக்கு விமான கோபுரக்கலசங்களுக்கு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. கும்பாபிேஷக விழாவில், எஸ்டேட் முதன்மைமேலாளர் அம்பலத்தரசு, வால்பாறை தாசில்தார் நேரு, நகராட்சி கமிஷனர் சாந்தகுமார், தலைவர் சத்தியவாணிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.