பதிவு செய்த நாள்
31
ஜன
2015
11:01
திருப்பூர்: திருப்பூர் ஜெய் நகர் வித்ய விகாசினி பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், வாழ்வில் சிறந்து விளங்கவும் வேண்டி, அம்மையப்பர் வழிபாடு, பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்யும் சிறப்பு வழிபாடு, பள்ளியில் நடந்தது. தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்தனர். கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பெற்றோருக்கு, மாணவர்கள் பாதபூஜை செய்தனர். பெற்றோர், குழந்தைகளை ஆசி ர்வதித்தனர். மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களை ஆசி ர்வதித்தனர்.