சின்னசேலம்: சின்னசேலம் அருகே ராயப்பனூரில் உள்ள கைலாசநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் காமாட்சி அம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது. யாக சாலை அமைக்கும் பணிகள், வர்ணம் பூசுதல், பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.