பதிவு செய்த நாள்
31
ஜன
2015
11:01
வேலூர்: வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக மக்களின் நலனுக்காக 1,008 சுமங்கலிகள் பங்கேற்ற பூஜை நேற்று நடந்தது. இதில், கணவன்ரூ மனைவி ஒற்றுமை, மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேரவும், குழந்தை பாக்யம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து, 1,008 சுமங்கலிகள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். ஸ்ரீமுரளிதர சுவாமிகள் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோபால், ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ., பிரியதர்ஷிணி, வாலாஜாபேட்டை தாசில்தார் மணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீசூக்த ஹோமம் மற்றும் கர்ப்ப ரக்ஷாம்பிகை யாகத்தை, 10க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் நடத்தினர். முடிவில், ஆரோக்ய லட்சுமிதேவிக்கும், மரகதேஸ்வர சமேத மரகதீஸ்வரி தேவிக்கும், கலச தீர்த்தத்தைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நிர்மலா முரளிதரன் செய்திருந்தார்.