சபரிமலையில் சேவை செய்த பக்தர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2015 11:01
மதுரை: மதுரையில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஏஞ்சல் நகர் கிளை சார்பில் சபரிமலையில் சேவை செய்த பக்தர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கிளை செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் விஸ்வநாதன் பேசும்போது, ”சங்கம் சார்பில் மண்டல, மகர விளக்கு காலங்களில் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள், மளிகை பொருட்கள் நன்கொடையாக பெறப்பட்டு 15 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருத்துவ சேவையால் கடந்த ஆண்டை விட இறப்பு எண்ணிக்கை 30ஆக குறைந்தது. பக்தர்கள் சேவையை தேவசம் போர்டு, மத்திய அமைப்பு நிர்வாகிகள் பாராட்டினர்,” என்றார். மாவட்ட கவுரவ தலைவராக குருசாமி தேர்வு செய்யப்பட்டார். நிர்வாகிகள் பாண்டியராஜன், ராஜதுரை கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொருளாளர் சோணை, கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். கிளை தலைவர் பால முருகன் நன்றி கூறினார்.