விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, வரும் 17ம் தேதி காலை 7:00 மணிக்கு சங்குஸ்தாபனம் பூஜை ஹோமம், பூர்ணாஹூதி, மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு 11:00 மணிக்கு மூன்றாம் காலை பூஜை 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. 18ம் தேதி காலை 5:00 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தர்ஷினி இசைப்பயிலக மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.