பழனி பக்தர்களுக்கு மின்சார விழிப்புணர்வு தகவல் மையம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2015 11:01
ஒட்டன்சத்திரம்: மின்சார பாதுகாப்பு மற்றும் மின்சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒட்டன்சத்திரம் யூனியன் அலுவலகம் முன் ஒரு தகவல் மையம் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் திறந்து வைத்தார். ஒட்டன்சத்திரம் செயற்பொறியாளர் சுகுமார், உதவி செயற்பொறியாளர்கள் விஜய், வெங்கடேஷ்வரன், உதவி பொறியாளர்கள் அய்யக்குட்டி, அருண்கார்த்திக், சிவராமன், புன்னியராகவன், சண்முகசுந்திரம், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மின்சிக்கனம், மின் விபத்து தவிர்ப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. கீழே அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாதீர். மின் கம்பிகளுக்கு கீழே பந்தல்கள், கொட்டகைகள் போடாதீர். மின்கம்பங்களை பந்தல்கால்களாகப் பயன்படுத்தாதீர் என்பது உட்பட 10 விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிபட்பட்டிருந்தது. மின்விபத்து தவிர்ப்பது பற்றி பிளக்ஸ் போர்டுகள், திண்டுக்கல் முதல் பழனி வரை ஒரு கி.மீ.க்கு ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.