தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அந்தோணியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இங்கு ஆண்டு தோறும் தை மாதத்தில் திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா கொடியேற்றம் நேற்று முன் தினம் மாலை நடந்தது. இதில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியேற்றி வைத்தார். பாதிரியார் குழந்தை ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மதியம் 12 மணிக்கு ஜெப வழிபாடும், மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், நவநாள் ஜெபம், மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இறுதி நாளான 10 ம் நாள் புனிதரின் திருவுருவப்பவனி நடக்கும்.