மயிலாப்பூர்: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், இன்று இரவு தெப்ப திருவிழா துவங்குகிறது.
சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில், இன்று இரவு 7:00 மணிக்கு, தெப்ப திருவிழா துவங்கி, நாளை மறுநாள் வரை நடக்கிறது. தெப்ப திருவிழாவின் முதல் நாளான இன்று, தெப்பத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளையும், நாளை மறுநாளும், சிங்காரவேலர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.