பதிவு செய்த நாள்
03
பிப்
2015
03:02
கடம்பத்தூர்: கடம்பத்தூர், லட்சுமி அம்மன் நகரில் உள்ள கடம்பவன முருகன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர் முருகன் கோவிலில், பிப்., 9ம் தேதி, காலை, விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும், தீபாராதனையும் நடைபெறும். பின் மாலை, அங்குரார்பணம், யாகசாலை பிரதிஷ்டை, பிரேவச பலியும் நடைபெறும். பின், 10ம் தேதி, காலை, வேத பாராயணமும், கரிகோலமும், சணனாதிவாசமும் நடைபெறும். பின், மாலை, பூர்ணாஹூதியும், அஷ்ட பந்தனமும், பிம்ப பிரதிஷ்டையும் நடக்க உள்ளது. அதன்பின், பிப்., 11ம் தேதி, காலை விக்னேஸ்வர பூஜையும், கலச புறப்பாடும் நடைபெறும். பின், காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், விமான அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடைபெறும்.