நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. முதல் நாள் கொடியேற்றமும், 6-வது நாள் வலியபடுக்கை நிகழ்ச்சியும், 9-வது நாள் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும், 10-வது நாள் ஒடுக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதற்கான பந்தல் கால்நாட்டு விழா இன்று 3-ம் தேதி நடக்கிறது. காலை 7.30-க்கு பந்தல் கால்நாட்டு நடக்கிறது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.