அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றியம் வளத்தி காளிகாம்பாள் கோவில் அருகேயுள்ள வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 3.30 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோவில் வளாகம் எதிரில் தீ மிதித்தனர். அன்னதானம் வழங்கினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. அவலுார்பேட்டையில் சித்தகிரி முருகனுக்கு நேற்று காலை கணபதி பூஜையுடன் தைப்பூச விழா துவங்கியது. அகத்தீஸ்வரர் கோவிலிலிருந்து 108 பால் குடம் ஊர்வலம் சித்தகிரி முருகன் கோவிலுக்கு மாடவீதியாக எடுத்து சென்றனர். முருகப்பெருமானுக்கு பால் குடம் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மேலச்சேரி சுப்ரமணிய சுவாமி கோவிலில் 25 ம்தேதி காப்பு கட்டுதலுடன் தைப்பூச விழா துவங்கியது. 2ம் தேதி பால் குடங்களுடன் வீதியுலா சென்று ஊரணி பொங்கல் வைத்தனர். 3ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. உரி வேல் போடுதல், கொக்கி தேர் இழுத்தல், மஞ்சள் , அரிசி மாவு இடித்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.