செஞ்சி: அனந்தபுரம் ஸ்ரீமத் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து தீமிதித்தனர். செஞ்சி தாலுகா அனந்தபுரம் ஸ்ரீமத் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச விழா கடந்த 2ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. காலை 11 மணிக்கு மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு ஸ்ரீமத் தண்டாயுதபாணி சுவாமி இந்திர விமானத்தில் சாமி வீதியுலா நடந்தது. 3ம் தேதி காலை 11 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பால் காவடி எடுத்து தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேகம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு தீமிதி விழா நடந்தது.
நூற்றுக்கணக்கானோர் வேல் குத்தியும், காவடி எடுத்தும் தீக்குண்டம் இறங்கினர். நூற்றுக்கணக்கானோர் தேர் இழுத்து வந்தனர். டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.