பொன்னேரி: பொன்னேரி -திருவொற்றியூர் சாலையில், திருவேங்கிடபுரத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், 8ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பொன்னியம்மன் கோவிலை புனரமைக்கும் பணிகள், கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. புதிய கட்டுமானங்களுடன் கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, இம்மாதம், 8ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
நாள் நேரம் நிகழ்ச்சி
பிப்., 6 காலை 9:00 மணி விநாயகர் பூஜை மாலை 6:00 மணி அங்குரார்ப்பணம் பிப்., 7 காலை 8:30 மணி புதிய சிலைகள் கண் திறத்தல் மாலை 5:00 மணி புதிய சிலைகள் பிரதிஷ்டை பிப்., 8 காலை 6:00 மணி விசேஷ திரவிய ஹோமம் காலை 7:30 மணி யாத்ரா தானம் காலை 8:00 மணி கோபுர கும்பாபிஷேகம் காலை 8:15 மணி விநாயகர் மற்றும் முருகர் கும்பாபிஷேகம் காலை 8:30 மணி மூலவர் பொன்னியம்மன் மகா கும்பாபிஷேகம் காலை 8:45 மணி நவக்கிரகங்கள் கும்பாபிஷேகம் மாலை 6:00 மணி பொன்னியம்மன் வீதி உலா.