Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் காளி கோவிலில் ... செம்பட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்! செம்பட விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராபர்ட்சன்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
11:02

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவில் "ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா, 7ம் தேதி துவங்கியது. 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

Default Image

Next News

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில், பல ஆண்டுகளாக, பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில், மஹா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வந்தது, திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகத்துக்கு தயாராகி வருகிறது.

இன்று, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகிறது. 9 ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.முதல் நாளான, இன்று (7ம் தேதி), மாலை 6 மணிக்கு, மஹா கணபதி, மூலதேவத பிரார்த்தனை, புனித நீர் தெளித்தல், காப்புக்கயிறு கட்டுதல், சிவாச்சார்யார்கள் வேதம் ஓதுதல், கும்ப கலசம் வைத்தல், வாஸ்து பூஜைகள், வாஸ்து ஹோமங்கள், வாஸ்து சாந்தி பூஜைகள், மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாத
விநியோகம்இரண்டாம் நாளான, 8ம் தேதி, காலை 8மணிக்கு சூரிய நமஸ்காரம், பிரார்த்தனை செய்தல், கலச ஸ்தாபனம், ஸ்வாமி விக்ரஹகங்களை சுத்தி செய்தல், மஹா கணபதி, சுப்பிரமணியர், நவக்கிரஹ ஹோமங்கள் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு, கலச அர்ச்சனை, சுதர்சன, ஆஞ்சநேயா ஹோமம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் விநியோகம், இரவு 9 மணிக்கு, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல்,
மூன்றாம் நாளான, 9ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம், அதிகாலை 5.30 மணிக்கு, கலச அர்ச்சனை, கலச பூஜை, சந்திர ஹோமம், காலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பிராண பிரதிஷ்டை, வாசவி ஹோமம், ருத்ர ஹோமம், மஹா பூர்ணாஹüதி நடக்கிறது.

இதன் பின்னர், பகல் 12 மணியிலிருந்து ஒரு மணி வரையிலும் கர்நாடகா மாநிலம் ஹரிஹரபுரா ஆதிசங்கராச்சார்யா சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் "பரம பூஜ்ய ஸ்ரீமத் ஜெகத்குரு சங்கராச்சார்யாஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹா சுவாமிகள் முன்னிலையில், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து, விக்ரஹகங்களுக்கு மஹா அலங்காரம், அர்ச்சனை, மஹா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

இரவு 7 மணிக்கு, வாண வேடிக்கைகளுடன், கன்னிகா பரமேஸ்வரி, திருவீதி உலா புறப்படுகிறார். பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு, மறைந்த அஸ்வத் நாராயண ஷெட்டி குடும்பத்தினர், கோதண்டராம செட்டி, சந்திரசேகர ரெட்டி, சீனிவாசா, சங்கரநாராயண செட்டி மற்றும் ஆர்ய வைஸ்ய மண்டலியினர், ஆர்ய வைஸ்ய மகளிர் மண்டலியினர், ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar