Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி கும்பாபிஷேகம்! சிங்கம்புணரி கும்பாபிஷேக விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதி திறப்பு எப்போது? ரூ.1 கோடி வீண்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகள், கடந்த 2 ஆண்டுகளாக மூடி கிடப்பதால் பக்தர்கள் பாதிக்கப் படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 10 ஆயிரத்துக்கு அதிகமான பக்தர்கள் ரயில், பஸ்களில் வருகின்றனர். இங்குள்ள தனியார் லாட்ஜில் தங்க பண வசதியின்றி, கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் ஓய்வெடுத்து விட்டு, சுவாமி தரிசனம் செய்கின்றனர். சுத்தமான குடிநீர் இன்றி, தூசிகளுடன் தெருவில் அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள், சில சமயம் உடமைகள், பணத்தை திருடர்களிடம் பறி கொடுத்து விட்டு தவிக்கின்றனர். இதை தவிர்க்க, 2013 ல் கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில், ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஆண், பெண் பக்தர்களுக்கு 2 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன. கட்டுமான பணிகள் முடிந்து, 2 ஆண்டுகள் ஆகியும் விடுதிகள் மூடியே கிடப்பதால் பக்தர்கள், தங்களது உடமைகளை கையில் தூக்கி கொண்டு நகர் முழுவதும் அலையும் அவலம் உள்ளது.

கோயில் ஊழியர்களின் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் விடுதி கட்டடத்தின் இரும்பு கதவு கள் துருப்பிடித்து பலவீனமாகி வருகிறது. மேலும் விடுதியை சுற்றி வளர்ந்துள்ள முள் செடி, பாம்புகள், விஷ வண்டுகளுக்கு புகலிடமாக மாற்றி உள்ளது.இந்த விடுதிகளை ஓராண்டுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெ., திறந்து வைப்பதாக இருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையான பிறகு, விடுதியை திறந்து வைக்க உள்ளதாக கோயில் ஊழியர்கள் கூறுகின்றனர். இளைபாறி செல்ல வழியின்றி தவிக்கும் ஏழை பக்தர்கள் நலன் கருதி, 2 விடுதிகளையும் பயன் பாட்டிற்கு கொண்டு வர, இந்து அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோயில் அதிகாரி கூறுகையில்,"" தங்கும் விடுதிகளின் கட்டுமான பணி 100 சதவீதம் முடிந்தது. இந்து அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி விரைவில் திறக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான இன்று கருட சேவை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar