அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2015 02:02
உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார். உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் சுவாமி கோவில், உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் சுவாமி கோவில், ஆதனூர் அருணாசலேஸ்வரர் சுவாமி கோவில், திருநாவலூர் மனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. பெண்கள் விளக்கேற்றி சுவாமியை வழிப்பட்டனர்.