பதிவு செய்த நாள்
18
பிப்
2015
03:02
பழநி : மகா சிவராத்திரியை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயில்,
பெரியநாயகியம்மன்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்கள் சிறப்பு பூஜைகள், குலதெய்வ வழிபாடு நடந்தது.
நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பழநி, கீரனூர், தொப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி உட்பட அனைத்து இடங்களிலுள்ள சிவன்கோயில்கள், குலதெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் நடந்தது. கோவை ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரியை முன்னிட்டு அக்ஷயா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் இரவு முழுவதும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில் போன்ற இடங்களில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 12 மணிக்குமேல் அர்த்தஜாம பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் அப்சர்வேட்டரி கற்பக விநாயகர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. அகில பாரத ஐயப்பா சேவா சங்க கொடைக்கானல் கிளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட தலைவர் அகஸ்தீஸ்வரன், நகர தலைவர் துரைராஜ், செயலாளர் செல்வராஜ், கால்டன் ஓட்டல் மேலாளர் ராமன் ராஜ்குமார், விஞ்ஞானி குமரவேல் பங்கேற்றனர்.