திருச்செந்தூர் முருகன் கோயில் மகாசிவராத்திரி நான்கு கால சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2015 03:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு இரவு நான்கு கால பூஜைகள் நடந்தது.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு நான்கு கால பூஜைகள் நடந்தது. வழக்கமாக இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். நேற்றிரவு(பிப்.17) 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன் பின்பு முதல்கால பூஜை துவங்கியது. இதில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அல்காரம், தீபாரதணை நடந்தது. இதனை தொடர்ந்து நான்கு கால வேளை பூஜைகள் காலை 6மணி வரை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில் உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர்கோயில், காஞ்சிகத்தி கொண்ட பாண்டீஸ்வரர் கோயில், நவ கைலாய தலங்களான ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய சிவன் கோயில்களில் சுவாமிக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாரதணை நடந்தது. சிறப்பு பூஜைகள் காலை 6 மணி வரை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.