விழுப்புரம் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2015 03:02
விழுப்புரம்: விழுப்புரம் கைலாச நாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா துவங்கியது. விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று காலை துவங்கியது.
காலை 7:00 மணியளவில் 1008 சங்கு ஸ்தாபன பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதியும், மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு நடந்தது. இரவு 11 :00 மணிக்கு மூன்றாம் கால பூஜையின் போது 1008 சங்காபிஷேகம் நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு தர்ஷிணி இசைப் பயிலக மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டியாஞ்சலி நடனப் பள்ளி சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சரவணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.