செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா, நேற்று முன்தினம், மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவ ங்கியது. நேற்று காலை, 10:15 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப அலங்காரத்தில் இருந்த அங்காளம்மனை, மயானத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பக்தர்கள் உணவை கொள்ளை விட்டபோது, அங்காளம்மன் பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ÷ காவிலில் இருந்து அம்மன் மயானத்திற்கு ஊர்வலமாக வந்த போது, நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்களை வாரி இறைத்து பக்தர்கள் ÷ நர்த்தி கடன் செலுத்தினர். உயிர் கோழிகளை வாயால் கடித்து பலி கொடுத்தனர்.