திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மற்றும் அன்னபிரசாதத்தை ருசி பார்த்த ராஜ்ய சபா கமிட்டி எல்லாமே பிரமாதம் என்று சான்றிதழ் கொடுத்துள்ளனர். ராஜ்ய சபா உறுப்பினர் டாக்டர் டி.சுப்புராமி ரெட்டி தலைமையிலான 15 உறுப்பினர்கள் கொண்ட குழு திருமலை திருப்பதி கோயிலுக்கு வருகை தந்து பக்தர்களுக்கான வசதிகள் சேவைகள் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்தனர். பிரசாதமாக வழங்கப்பட்ட சின்ன லட்டு மற்றும் பக்தர்களுக்கு மலிவு விலையில் விநியோகிக்கப்படும் பெரிய லட்டு போன்றவைகளை சுவை பார்த்தனர் அதே போல பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னபிரசாதத்தையும் சாப்பிட்டு பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுப்புராமி ரெட்டி பேசுகையில் பக்தர்களுக்கான பிரசாதங்களும் அவர்களுக்கான சேவைகளும் சிறப்பாகவே உள்ளன. நான் சில வருடங்களுக்கு முன் கோவிலின் சேர்மனாக இருக்கும் போது நா.ௌான்றுக்கு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இப்போது 60 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது என்று எண்ணும்போது பிரமிப்பாக இருக்கிறது.அதே போல தினமும் 2புள்ளி75 லட்சம் லட்டுகள் தயராகிவருவதும் மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பக்தர்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் தரிசன வசதிகளும் செய்துதரப்படுவதும்,ஐம்பது ரூபாய்க்கான தங்கும் விடுதியின் தரம்கூட சிறப்பாக பராமரிக்கப்படுவதும் நிர்வாகத்தின் திறமையையே வெளிக்காட்டுகிறது வாழ்த்துக்கள் என்று கூறினார்.