திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் கோட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கிறது. திண்டிவனம் கிடங்கல் கோட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள கமல விநாயகர் மற்றும் வனதுர்கா, ஆஞ்சனேய மூர்த்தி சன்னதிகளுக்கும் 22 ம் தேதி காலை 7.30 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.