பதிவு செய்த நாள்
20
பிப்
2015
12:02
பாகசாலை: பாகசாலை, பாலசுப்ரமணிய கோவிலில், வரும் 23ம் தேதி, கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவம் துவங்கவுள்ளது. பேரம்பாக்கம் அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் உள்ளது பாலசுப்ரமணிய கோவில். இந்தாண்டு, மாசி பிரம்மோற்சவம், வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, இன்று காலை 9:00 மணிக்கு, கற்பக விநாயகர் சிறப்பு வழிபாடும், நாளை காலை 9:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடும் நடைபெறும். அதன்பின், நாளை மறுநாள், மாலை 4:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் பூர்வாங்க நிகழ்ச்சிகளும், இரவு 7:00 மணிக்கு, கற்பக விநாயகர் வீதியுலாவும் நடைபெறும். தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஏழாம் திருவிழாவான வினையறுக்கும் வேல் பூஜை, வரும் மார்ச் 1ம் தேதியும், திருக்கல்யாணம், 2ம் தேதி மாலை 6:00 மணிக்கும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம், 4ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை, தீர்த்தவாரியும்; இரவு, இந்திர விமானத்தில் வீதியுலாவும் நடைபெறும். 5ம் தேதி, விடையாற்றி மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.