விருத்தாசலம்: விருத்தாசலம் ஆழத்து விநாயகர், நால்வருடன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ விழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு 10 நாள் உற்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. நேற்று (19ம் தேதி) 7ம் நாள் உற்சவமாக இரவு 7:00 மணிக்கு நடராஜர் சுவாமி சன்னதியில், ஆழத்து விநாயகர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகிய நால்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து பல்லக்கில் சுவாமிகள் வீதியுலா வந்து அரு ள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். வரும் 21ம் தேதி தேரோட்டம், 22ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.